Apple Intelligenceஐ ஆன் செய்தல்
Apple Intelligence ஆஃப் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் அதை ஆன் செய்யலாம்.
அமைப்புகள்
> Apple Intelligence & Siri என்பதற்குச் செல்லவும்.
பின்வரும் ஒன்றைச் செய்யவும்:
Apple Intelligenceக்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டவும்.
“Apple Intelligenceஐ ஆன் செய்” என்பதைத் தட்டவும்.
உங்களிடம் உள்ள iPadOS பதிப்பு, நீங்கள் ஏற்கெனவே Apple Intelligenceஐ அமைத்துள்ளீர்களா இல்லையா ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கு ஒரு விருப்பம் காட்டப்படும்.
குறிப்பு: உங்கள் சாதனம், மொழி மற்றும் வட்டாரத்தில் Apple Intelligence கிடைக்கிறதா என்று பார்க்க, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.